Category : Computers | Sub Category : Posted on 2023-07-28
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் பிளாக்ஷிப் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களும் இடம்பெற்று இருந்தது. தற்போது இவற்றின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதிய கேலக்ஸி டேப் S9 சீரிஸ் கிராபைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள்: கேலக்ஸி S9 128 ஜிபி வைபை மாடல் ரூ. 72 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 128 ஜிபி 5ஜி மாடல் ரூ. 85 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 256 ஜிபி வைபை மாடல் ரூ. 83 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 96 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி வைபை மாடல் ரூ. 90 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 999 சாம்சங் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவற்றின் விலை ரூ. 20 ஆயிரம் வரை குறைகிறது. அனைத்து டேப்லெட் மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது.