அப்போ மறந்துட்டோம்.. டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 14 அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-18


அப்போ மறந்துட்டோம்.. டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 14 அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கும் என்று தகவல்.

ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்தே, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் லைட்னிங் போர்ட்-ஐ சார்ஜிங் செய்வதற்கு வழங்கி வருகிறது. இந்த நிலை, விரைவில் மாறிவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 மாடல்கள் மட்டுமின்றி, பல்வேறு பழைய ஐபோன் மாடல்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் டெவலப்பர் மற்றும் எழுத்தாளரான ஆரோன் தெரிவித்து இருக்கிறார்.

டி.வி. ஒ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் ஆரோன் இரண்டு ஐபோன் மாடல்களை கண்டறிந்து இருக்கிறார். இவை ஏற்கனவே இடம்பெற்று இருந்த நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை விட வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இவை ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் யு.எஸ்.பி. டைப் சி வெர்ஷனாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களை ரிமேக் செய்து யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குமா என்றால், அதற்கு அதிக சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும். எனினும், ஐரோப்பிய யூனியனின் சமீபத்திய விதிகளின் படி, அங்கு விற்பனை செய்யப்படும் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் ஆகும். அந்த வகையில், இந்த பகுதிகளில் விற்பனைக்கும் வரும் மொபைல் போன்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் என்று 2020-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க ஒரே காரணம் ஐரோப்பிய யூனியன் விதித்து இருக்கும் புதிய விதிகளை பின்பற்றுவதற்காகவே இருக்க வேண்டும்.

Leave a Comment: