விலை ரூ. 899 தான்.. 50 மணி நேர பிளேபேக் வழங்கும் புது இயர்பட்ஸ் அறிமுகம்!

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-08-19


விலை ரூ. 899 தான்.. 50 மணி நேர பிளேபேக் வழங்கும் புது இயர்பட்ஸ் அறிமுகம்!

விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது. விங்ஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்- ஃபுளோபட்ஸ் 100-ஐ அறிமுகம் செய்தது. புதிய மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபுளோபட்ஸ் 200 மாடலினை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3 மற்றும் AAC கோடெக் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபிடிலிட்டி டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகின்றன.

யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது. புதிய விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்: புளூ, பிளாக் மற்றும் வைட் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Comment: