இனி ஃபோல்டபில்ஸ் விற்பனை பிச்சிக்கும்.. சாம்சங் சூப்பர் திட்டம்..!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-23


இனி ஃபோல்டபில்ஸ் விற்பனை பிச்சிக்கும்.. சாம்சங் சூப்பர் திட்டம்..!

சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டம். கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மாடல்களின் குறைந்த விலை எடிஷன் உருவாகி வருவதாக தகவல். சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய மற்றும் ஃப்ளிப் போன் மாடல்கள்- கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாடல்கள் ஃபேன் எடிஷன் (FE) பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் FE எடிஷன் மாடலை விற்பனை செய்து வருகிறது. இதே போன்று தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z FE மாடலை அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

புதிய தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவன மடிக்கக்கூடிய மற்றும் ஃப்ளிப் ரகத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், இந்த குறைந்த விலை மாடல்கள் அடுத்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6 அல்லது கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களை தொடர்ந்தே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை வழங்கி இருக்கும் டிப்ஸ்டர் கேலக்ஸி S23 FE மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இறுக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஏற்கனவே கேலக்ஸி S23 FE பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

Leave a Comment: