Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-25
மோட்டோரோலா நிறுவனத்தின் G84 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது. மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இது பற்றிய தகவல் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசரில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது.
அதன்படி மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் oPOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G82 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ, மார்ஷ்மல்லோ புளூ மற்றும் விவா மஜெண்டா என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.