Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-28
விவோ V29e ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ V29e விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. விவோ நிறுவனத்தின் புதிய விவோ V29e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட வளைந்த AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆர்டிஸ்டிக் டிசைன் கொண்டிருக்கும் விவோ V29e ஸ்மார்ட்போனின் பின்புறம் டைமன்ட் கட் க்ரிஸ்டல் மற்றும் ஷிம்மரிங் டெக்ஸ்ச்சர் உள்ளது. இவை ஸ்மார்ட்போனிற்கு ஆடம்பர தோற்றத்தை வழங்குகிறது. இதன் ஆர்டிஸ்டிக் ரெட் நிற வேரியண்ட் நிறம் மாறும் கிளாஸ் கொண்டிருக்கிறது. இது யு.வி. அல்லது சூரிய வெளிச்சம் படும் போது ரெட்-இல் இருந்து பிளாக் நிறத்திற்கு மாறிவிடும்.
விவோ V29e அம்சங்கள்: 6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் அட்ரினோ 619L GPU 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.2 மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 13 64MP பிரைமரி கேமரா, OIS 8MP அல்ட்ரா வைடு கேமரா 50MP AF செல்ஃபி கேமரா இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1 யு.எஸ்.பி. டைப் சி 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ V29e ஸ்மார்ட்போன் ஆர்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்டிஸ்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.