டிமென்சிட்டி 7200 பிராசஸருடன் அறிமுகமான ஐகூ Z7 ப்ரோ

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-01


டிமென்சிட்டி 7200 பிராசஸருடன் அறிமுகமான ஐகூ Z7 ப்ரோ

ஐகூ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, OIS கொண்டிருக்கிறது.

ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP இரண்டாவது லென்ஸ், ரிங் எல்.இ.டி., 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனினை 22 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

ஐகூ Z7 ப்ரோ அம்சங்கள்: 6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் மாலி-G610 MC4 GPU 8 ஜி.பி. LPDDR4X ரேம் 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.2 மெமரி ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 13 டூயல் சிம் ஸ்லாட் டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யு.எஸ்.பி. டைப் சி 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் புளூ லகூன் மற்றும் கிராஃபைட் மேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: