பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-04


பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி C51 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி C51 ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி C51 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டூயல் டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி C51 ஸ்மார்ட்போன் கிளாஸ் பவர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மினி கேப்சியுல் டிசைன் உள்ளது. இது போனின் பேட்டரி நிலவரம், டேட்டா பயன்பாட்டு விவரம் என பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது.

இத்துடன் 6.71 இன்ச் HD+ 1600x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், யுனிசாக் டி612 ஆக்டா கோர் பிராசஸர், மாலி G57 GPU, 4 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி C51 அம்சங்கள்: 6.7 இன்ச் 1600x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் யுனிசாக் டி612 ஆக்டா கோர் பிராசஸர் மாலி G-57 GPU 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. டி எடிஷன் 50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ் 5MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 யு.எஸ்.பி. டைப் சி 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 33 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ரியல்மி C51 ஸ்மார்ட்போன் மிண்ட் கிரீன் மற்றும் கார்பன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: