இருமடங்கு வேகம்.. டெஸ்டிங்கில் அசத்திய M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ!

Category : Smart Device | Sub Category : Posted on 2023-06-16


இருமடங்கு வேகம்.. டெஸ்டிங்கில் அசத்திய M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ!

ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மேக் ப்ரோ அறிமுகம். 2023 மேக் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது M சீரிஸ் பிராசஸர்களுடன் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) தனது சக்திவாய்ந்த மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மேக் ப்ரோ மாடலில் M2 அல்ட்ரா சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. M2 அல்ட்ரா பிராசஸர் கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ மாடல்களின் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 2023 மேக் ப்ரோ மாடல் வீடியோ எடிட், 3டி ரென்டரிங் மற்றும் அறிவியல் கணினியியல் என்று தொழில்ரீதியாக அதிக திறன் கொண்ட சாதனங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் M2 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

M2 அல்ட்ரா பிராசஸரில் 24 சி.பி.யு. கோர்கள், அதிகபட்சம் 76 ஜி.பி.யு. கோர்கள் மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. இதன் மூலம் இந்த பிராசஸர் புதிய மேக் ப்ரோ மாடலை சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கணினியாக மாற்றியுள்ளது. இது எந்த அளவுக்கு சக்தி கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பென்ச்மார்க் டெஸ்டிங் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில், M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 2 ஆயிரத்து 794 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 21 ஆயிரத்து 453 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. இது முந்தைய தலைமுறை மேக் ப்ரோ மாடலை விட அதிவேகமானது ஆகும்.

முந்தைய தலைமுறை ஆப்பிள் மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1,378 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 10 ஆயிரத்து 390 புள்ளிகளையும் பெற்றது. அதன்படி புதிய 2023 மேக் ப்ரோ அதன் முந்தைய வெர்ஷனை விட சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 20 சதவதீம், மல்டி கோர் டெஸ்டிங்கில் 25 சதவீதம் அதிக திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா சிப்செட்டில் இரண்டு M2 மேக்ஸ் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அல்ட்ரா-ஃபியுஷன் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2023 மேக் ப்ரோ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

Leave a Comment: