Category : Apps | Sub Category : Posted on 2021-10-22
வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகம் புது அம்சம் பெரிதளவு வரவேற்பை பெற்று வளர்ந்து வருகிறது. அது வாட்ஸ்அப் பேமெண்ட் பயன்பாடாகும். இந்த அம்சத்தின் முழு விவரங்களை பார்க்கலாம்.
வளர்ந்து வரும் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண பரிவர்த்தனை சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இன்னமும் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின்பு இந்த சேவையை பயன்படுத்த முயற்சிக்கலாம். குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை
வாட்ஸ்அப் சேவையை விரிவுப்படுத்தும் விதமாகவும் பயனர்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இதற்கு வங்கி கணக்கு தகவலை உள்ளிட அதனுடன் பதிவிட்ட தொடர்பு எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்
பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பேமெண்ட்டுகள் ஆனது பணம் செலுத்துவதற்கான பயன்பாடாக தற்போது பயனுக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் பேமெண்ட்கள் யூபிஐ பயன்படுத்தி வங்கி பண பரிவர்த்தனையை செயல்படுத்தும். யூபிஐ என்பது என்பிசிஐ மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கட்டண பரிவர்த்தனை செயல்முறை ஆகும். இது இந்தியாவின் பெரும்பாலான முக்கிய வங்கிகளை ஆதரிக்கிறது.
தொடர்புடைய எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டும்
உங்கள் வங்கி கணக்கு தகவலை அடையாளம் காண அதனுடன் தொடர்புடைய எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதில் வரும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப இந்தியாவில் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருத்தல் அவசியமாகும்.
யூபிஐ ஆதரவு செயலி
பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் பயனர்கள் யூபிஐ ஆதரவு செயலியை பயன்படுத்தி அனைவருக்கும் பணம் அனுப்பலாம். வாட்ஸ்அப் பயனர்கள் பணம் செலுத்தும் போது ஒவ்வொருவருக்கும் பரிவர்த்தனைக்கான தனிப்பட்ட யூபிஐ பின்-ஐ உள்ளிட வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் பயன்பாட்டை கிளிக் செய்து டிஸ்ப்ளேவின் மேல் உள்ள வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகள் உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.