Google Pixel 6, Pixel 6 Pro அறிமுகம், விலை மற்றும் விபரங்கள்.

Category : Mobiles | Sub Category : Posted on 2021-10-25


Google Pixel 6, Pixel 6 Pro அறிமுகம், விலை மற்றும் விபரங்கள்.

கூகுள் (Google) நிறுவனம் பிக்சல் 6 (Pixel 6) மற்றும் பிக்சல் 6 ப்ரோவை (Pixel 6 Pro) அறிமுகப்படுத்தியுள்ளது. Google தனது புதிய தொலைபேசியில் பெரிய மேம்படுத்தல்களை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இரண்டு தொலைபேசிகளும் சிறந்த வடிவமைப்பு மற்றும் அற்புதமான கேமராவைக் கொண்டுள்ளன. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம். 

Pixel 6 and Pixel 6 Pro specifications

Pixel 6 இல் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4 இன்ச் FHD+ மென்மையான டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே நேரத்தில் Pixel 6 Pro இல் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு போன்களிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளது. இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது. 

Pixel 6 and Pixel 6 Pro Colours
பிக்சல் 6 மாடலில் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது. அதே சமயம் பிக்சல் 6 ப்ரோ மாடலில் ஸ்டாமி பிளாக், சோர்டா சன்னி மற்றும் கிளவுடி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

Pixel 6 and Pixel 6 Pro Price in India 
பிக்சல் 6 இன் 8 ஜிபி + 128 ஜிபி விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,970, 8 ஜிபி + 256 ஜிபி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ இன் 12 ஜிபி + 128 ஜிபி விலை 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 67,490 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,995 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி விலை 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Pixel 6 and Pixel 6 Pro Battery
பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.

Pixel 6 and Pixel 6 Pro Camera
பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

Leave a Comment: