Category : Smart watches | Sub Category : Posted on 2021-10-21
ரெட்மி நிறுவனம் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி நடக்கவுள்ள ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டு விழாவில் ஒருபுதிய ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்துகிறது, அது ரெட்மி வாட்ச் 2 மாடல் ஆகும்.
ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி நோட் 11 சீரிஸுன் அறிமுகத்துடன் ரெட்மி வாட்ச் 2 மாடலையும் வெளியிடத் தயாராக உள்ளது. சீன சமூக ஊடகத்தளமான வெய்போ வழியாக புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் வருகையை நிறுவனம் டீஸ் செய்துள்ளது.
நாம் இங்கே பேசும் Redmi Watch 2 ஆனது வருகிற அக்டோபர் 28 அன்று சீனாவில் நடக்கும் ஒரு பிரத்யேக நிகழ்வில் தொடங்கப்படும்.
வடிவமைப்பு வாரியாக, ரெட்மி வாட்ச் 2 ஒரு சதுர வடிவிலான டயல் மற்றும் பக்கவாட்டில் ஒரு பிஸிக்கல் பட்டனைக் கொண்டுள்ளது. இது முந்தைய ரெட்மி வாட்ச் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.
இருப்பினும் ரெட்மி வாட்ச் 2 ஆனது அதிக சென்சார்களை ஒருங்கிணைத்து டிராக்கிங்கில் பல வகையான மேம்பாடுகளை கொண்டு வர வாய்ப்புள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி வாட்ச் 2-வின் வருகையை அறிவிக்க சியோமி நிறுவனம் வெய்போவை பயன்படுத்திக்கொண்டது . குறிப்பிட்ட வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 28 அன்று இரவு 7 மணிக்கு சிஎஸ்டி ஆசியாவில் (மாலை 4.30 மணி) தொடங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான போஸ்டரில் ரெட்மி வாட்ச் 2-வின் டயல் டீஸ் செய்யப்பட்டுள்ளது மற்றும் அது ஸ்மார்ட் வாட்சின் கலர் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை வெளிப்படுத்துகிறது. டீசரில் காணப்படும் வாட்ச் ஃபேஸ் உங்களின் ஸ்டெப்ஸ் எண்ணிக்கையைக் காட்சிப்படுத்தும் ரிங்களைக் காட்டுகிறது.
இது தவிரரத்து வெளியான டீஸர் போஸ்டர் வழியாக ரெட்மி வாட்ச் 2. பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் எதுவும் இல்லை. நாம் சில ஊகங்களை செய்ய வேண்டும் என்றால், ரெட்மி வாட்ச் 2 ஆனது டிஸ்ப்ளே, டிராக்கிங், மற்றும் சார்ஜ் செய்வதில் சில முன்னேற்றங்களைக் காணலாம்.
ரெட்மி வாட்ச் 2 உடன், இந்த சீன நிறுவனம் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த தொடரில் மூன்று மாடல்கள் இருக்கலாம் என்று JD.com பரிந்துரைக்கிறது - அதாவது Redmi Note 11, Redmi Note 11 Pro, மற்றும் Redmi Note 11 Pro+.
சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 11 பர்ஸ்ட் லுக் டீஸரில் இருந்து...
வெளியான விளம்பர போஸ்டர் வழியாக, ரெட்மி நோட் 11 ஆனது 3.5 மிமீ ஹெட்ஜாக் அப், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும் ரெட்மி நோட் 11 (சீரீஸ்) ஜேபிஎல் மூலம் இயக்கப்படும், எனவே சாதனங்களிலிருந்து நல்ல ஆடியோ தரத்தை எதிர்பார்க்கலாம். வால்யூம் அப் மற்றும் டவுன் பட்டன்கள் சாதனத்தின் வலது பக்கத்தில் உள்ளன, உடன் பவர் பட்டனும் உள்ளது.
இப்போதைக்கு, ஸ்மார்ட்போன்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறுமா என்று சொல்வது மிகவும் கடினம்.
முன்பக்கத்தில், மையமாக பொருத்தப்பட்ட சிங்கிள் பஞ்ச்-ஹோல் செல்பீ கேமராவை நாம் காண முடிகிறது. உடன் ரெட்மி நோட் 11-இன் டிஸ்ப்ளே விளிம்புகளைச் சுற்றி தட்டையாக உள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட ஓ ஒன்றுதான். மேலும் சாதனத்தின் இடது பக்கத்தில் எதுவும் இல்லை மற்றும் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ரெட்மி நோட் 11 ஒரு செவ்வக ஸ்லாப் போல் தெரிகிறது மற்றும் பிராண்ட் அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட "வளைவான வடிவமைப்பை" கைவிட்டுள்ளது.
இதுவரை, ஸ்மார்ட்போனின் ஒரே ஒரு வண்ண மாறுபாடு மட்டுமே டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெளியீடு நெருங்கி வருவதால், வரும் காலத்தில் அதிக டீஸர்களை எதிர்பார்க்கலாம்.