இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் பிக்சல் வாட்ச் 2 - லீக் ஆன புதிய தகவல்

Category : Smart watches | Sub Category : Posted on 2023-06-17


இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் பிக்சல் வாட்ச் 2 - லீக் ஆன புதிய தகவல்

கூகுள் ஆப் வெர்ஷன் 14.24-ல் இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் உள்ளன. பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தகவல். கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் வாட்ச் 2 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் வாட்ச் 2 மாடல் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன் படி ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர பிக்சல் வாட்ச் 2 மாடலின் சிறுவர் மட்டும் பயன்படுத்தும் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இது ஃபிட்பிட் பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஆப் அப்டேட் வெர்ஷன் 14.24 இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களுக்கான குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டு பெயர்கள் அரோரா மற்றும் இயோஸ் ஆகும். இவை ரோமன் மற்றும் கிரேக்க பெயர்களுடன் தொடர்புடையவை ஆகும். இதில் ஒரு மாடல் எல்டிஇ மோடெம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் 41 மில்லிமீட்டர் கேஸ் வழங்கப்படுகிறது. இவை கூகுள் வாட்ச் ஸ்டிராப்களுடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன. டிசைன் அடிப்படையில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய தகவல்களை கடந்து பிக்சல் வாட்ச் 2 மாடலின் அம்சங்களில் வெளியீட்டுக்கு முன் மாற்றங்கள் செய்யப்படலாம்.

Leave a Comment: