ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

Category : Smart watches | Sub Category : Posted on 2023-06-20


ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல டிராக்கிங் வசதிகளை கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட வசதி கொண்டிருக்கிறது.

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் பிரீமியம் ப்ளூடூத் காலிங் வாட்ச் கொண்டிருக்கிறது. டேகர் லூக்ஸ் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல், லெதர், மெட்டாலிக் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் வசதி, SpO2 டிராக்கிங், ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் மகளிர் உடல் ஆரோக்கயத்தை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் சப்போர்ட் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

ஃபயர் போல்ட் அல்டிமேட் அம்சங்கள்: 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன் வாட்ச் ஃபேஸ்கள் ப்லூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட் சின்க் கான்டாக்ட் இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் புஷ் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன் 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் ஸ்லீப், SpO2 மற்றும் இதய துடிப்பு டிராக்கிங் மகளிர் உடல் நல டிராக்கிங் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் குடிநீர் மற்றும் செடன்டரி ரிமைன்டர் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் வானிலை அப்டேட், இன்பில்ட் கேம்ஸ் மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் 270 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இன் லெதர் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெட்டாலிக் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக், சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஃபயர்போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இன்று துவங்குகிறது. லெதர் ஸ்டிராப் மாடல் விலை ரூ. 1799 என்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 1999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: