விரைவில் அறிமுகமாகும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ - அசத்தல் டீசர் வெளியீடு!

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-06-21


விரைவில் அறிமுகமாகும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ - அசத்தல் டீசர் வெளியீடு!

ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர் உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போதே ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. டீசரில் ஜூன் 10-ம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காக புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் LDAC கோடெக் கொண்டிருக்கிறது. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதன் இயர்பட்களில் 60 எம்ஏஹெச் செல் பேட்டரியும், கேசில் 460 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

Leave a Comment: