விரைவில் விற்பனைக்கு வரும் ரெட்மி பேட் 2

Category : Mobiles | Sub Category : Posted on 2023-06-24


விரைவில் விற்பனைக்கு வரும் ரெட்மி பேட் 2

ரெட்மி பிராண்டின் இரண்டாம் தலைமுறை டேப்லெட் விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய ரெட்மி பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் துணை பிரான்டு ரெட்மி தனது இரண்டாவது டேப்லெட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பேட் 2 பெயரில் உருவாகி வரும் புதிய டேப்லெட் FCC வலைதளத்தின் மூலம் லீக் ஆகி உள்ளது.

புதிய ரெட்மி பேட் 2 மாடல் இந்த ஆண்டு இறுதியில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் ரெட்மி பேட் 2 விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ரெட்மி பேட் 2 டேப்லெட் 23073RPBFL எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. FCC விவரங்களில் ரெட்மி பேட் 2 மாடல் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

இதன் என்ட்ரி லெவல் மாடலில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மற்றொரு வேரியண்ட்-ம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்-ம் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ரெட்மி டேப்லெட் வைபை வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய FCC சான்றின் மூலம், ரெட்மி பேட் 2 மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது. 

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: ரெட்மி பேட் 2 மாடலில் 2K ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8000 எம்ஏஹெச் பேட்டரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Comment: