லீக் ஆன ரென்டர்கள் - விரைவில் வெளியாகும் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப்!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-06-25


லீக் ஆன ரென்டர்கள் - விரைவில் வெளியாகும் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப்!

ஒப்போ ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடல் கேமரா செட்டப் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

ஒப்போ நிறுவனம் தனது ஃபைன்ட் N2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் தான் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் அறிமுகம் நடைபெற இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும், கிளாம்ஷெல் போன்ற மடிக்கக்கூடிய டிசைன் கொண்டிருக்கிறது. ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப் சற்று வித்தியாசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்களில் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ்கள், ஸ்மார்ட்போனின் பின்புறம் கீழ் பகுதியில் ஒப்போ பிரான்டிங் செய்யப்படுகிறது. மேலும் மூன்று கேமரா சென்சார்கள் அடங்கிய கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப், ஒப்போ ரெனோ 10 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலில் 50MP சோனி பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: 6.8 இன்ச் E6 AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 3.26 இன்ச் AMOLED 729x382 பிக்சல், 60Hz, ரிப்ரெஷ் ரேட் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் 8ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி 32MP செல்ஃபி கேமரா 4300 எம்ஏஹெச் பேட்டரி

Leave a Comment: