50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் மிவி இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-07-01


50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் மிவி இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

மிவி டுயோபாட்ஸ் A850 மாடல் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. புதிய மிவி இயர்பட்ஸ் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மிவி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டுயோபாட்ஸ் A850 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டுயோபாட்ஸ் K1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய மிவி டுயோபாட்ஸ் A850 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை புதிய இயர்பட்ஸ் கேசில் 'தி ஸ்டேரி நைட் எஃபெக்ட்' (The Starry Night Effect) வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-க்கு சிறப்பான மெட்டாலிக் ஃபினிஷ் வழங்குகிறது. இதன் காரணமாக பாட்ஸ் அதிக பிரீமியம் தோற்றம் பெற்றுள்ளது. இதில் உள்ள 13mm எலெக்ட்ரோபிலேட் செய்யப்பட்ட டீப் டிரைவர்கள் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்குகின்றன.

இந்த இயர்பட்ஸ்-இல் Ai-ENC அம்சம் உள்ளது. இது அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிப்படுத்துகிறது. மிவி டுயோபாட்ஸ் A850 மாடலில் உள்ள பேட்டரி 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம், டைப் சி சார்ஜிங், 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 500 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது. புதிய மிவி டுயோபாட்ஸ் A850 இயர்பட்ஸ்-இல் அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட் வசதி, டூயல் கனெக்ஷன் மோட் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் விற்பனை விவரங்கள்: புதிய மிவி டுயோபாட்ஸ் A850 மாடல் புளூ, பிளாக், கோரல், ஐவரி மற்றும் மின்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Comment: