ஸ்மார்ட்போன்களுடன் நெக்பேன்ட் இயர்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-07-02


ஸ்மார்ட்போன்களுடன் நெக்பேன்ட் இயர்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது. ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும்.

ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் இயர்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போனின் வெளியீட்டு தேதி, குறிப்பிட்ட சில அம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி இந்தியாவில் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடல் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரில் புதிய நெக்பேன்ட் இயர்போன் 13.6mm டைனமிக் பாஸ் டிரைவர்கள் மற்றும் 30db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

புதிய ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த வயர்லெஸ் நெக்பேன்ட் இயர்போன் ரியல்மி நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மியின் புதிய இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

அதன்படி ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று டிப்ஸ்டரான சுதான்ஷூ அம்போர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் அறிமுகமாகும் நிகழ்விலேயே நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 60 சீரிஸ் விலை ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று தெரிகிறது.

Leave a Comment: