கேமிங் டேப்லெட் அறிமுகம் செய்யும் ரெட் மேஜிக்

Category : Computers | Sub Category : Posted on 2023-07-03


கேமிங் டேப்லெட் அறிமுகம் செய்யும் ரெட் மேஜிக்

கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி இரண்டு போஸ்டர்கள் வெய்போ தளத்தில் வெளியிடப்பட்டது. ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 10000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் பிரான்டில் புதிய கேமிங் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட் மேஜிக் 8s ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு சாதனங்களின் அறிமுக நிகழ்வு ஜூலை 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய கேமிங் டேப்லெட் பற்றிய விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி நுபியா நிறுவனம் இதுவரை இரண்டு போஸ்டர்களை சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் போஸ்டர் டேப்லெட் முன்புற தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அம்பலப்படுத்துகிறது. இதுதவிர வேறு எந்த தகவலும் முதல் போஸ்டரில் இடம்பெறவில்லை.

மற்றொரு போஸ்டரில் இந்த டேப்லெட் அதிகபட்சமாக 10000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரெட்மி மேஜிக் டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 12.1 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் வழங்கப்பட இருக்கும் கேமராக்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும் இந்த டேப்லெட் 5ஜி வெர்ஷன் வடிவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் மாடல் ZTE ஆக்சன் பேட் 5ஜி மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் பேட் மாடலில் 12.1 இன்ச் LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 10000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங், 13MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

Leave a Comment: