ரூ. 800 விலையில் போட் ஏர்டோப்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-07-06


ரூ. 800 விலையில் போட் ஏர்டோப்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய நுகர்வோர் மின்சாதன பிரான்டு, போட் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் IPX5 சான்று, அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.

போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்துடன், சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-இல் ENx தொழில்நுட்பம் உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதற்காக டூயல் மைக்ரோபோன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் ஏர்டோப்ஸ் ஆல்பா, டச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இத்துடன் செமி இன்-இயர் டிசைன் கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திறகு பிளேடைம், பத்து நிமிட சார்ஜிங்கில் இரண்டு மணி நேர பிளேபேக் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பீஸ்ட் மோட், லேடன்சியை 50ms வரை குறைக்கும். இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Leave a Comment: