டச் ஸ்கிரீன் வசதி கொண்ட புதிய மானிட்டர் இந்தியாவில் அறிமுகம்

Category : Computers | Sub Category : Posted on 2023-07-07


டச் ஸ்கிரீன் வசதி கொண்ட புதிய மானிட்டர் இந்தியாவில் அறிமுகம்

இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது. வியூசோனிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய VP-16 OLED, போர்டபில் டச் ஸ்கிரீன் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த 15.6 இன்ச் கலர்ப்ரோ மானிட்டர் 1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன், பான்டோன் வேலிடேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இது மானிட்டரை பல்வேறு கோணங்களில் வைத்து பயன்படுத்த வழி செய்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் டிரைபாட் மவுன்ட் மூலம் மானிட்டரை ஐந்து கோணங்களில் வைத்துக் கொள்ள முடியும். இந்த மானிட்டரில் கேமராவை மவுன்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இதன் OLED டிஸ்ப்ளே, பரவலான கலர் கமுட், 100 சதவீதம் DCI-P3 கவரேஜ், அதிக காண்டிராஸ்ட் ரேஷியோ உள்ளது. இந்த மானிட்டர் உடன் கழற்றக்கூடிய பாதுகாப்பு கவர் வழங்கப்படுகிறது. இது ஆம்பியன்ட் பிரைட்னஸ் இருந்த போதிலும், ஷேடிங் ஹூட் போன்று செயல்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு லேப்டாப் மூலம் பயன்படுத்தவோ அல்லது லேப்டாப், மொபைல் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றவோ முடியும். இத்துடன் மினி HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது. புதிய வியூசோனிக் VP-16 OLED மானிட்டர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே விலை ரூ. 75 ஆயிரம் ஆகும். எனினும், இது ரூ. 49 ஆயிரத்து 999 (வரிகள் சேர்க்கப்படவில்லை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Leave a Comment: