இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி S21 FE

Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-09


இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி S21 FE

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S21 FE புது வேரியண்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன. புதிய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகம். சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்டை சத்தமின்றி அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், கேலக்ஸி S21 FE புதிய வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. கேலக்ஸி S21 FE மாடல் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில், இந்த வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எக்சைனோஸ் பிராசஸருக்கு மாற்றாக குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி S21 FE மாடலின் மற்ற அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7.9 மில்லிமீட்டர் தடிமனாக, 177 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Leave a Comment: