ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் டெஸ்டினி - இந்தியாவில் அறிமுகம்!

Category : Smart watches | Sub Category : Posted on 2023-07-11


ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் டெஸ்டினி - இந்தியாவில் அறிமுகம்!

பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரான்டு பயர் போல்ட் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை டெஸ்டினி எனும் பெயரில் அறிமுகம் செய்தது. புதிய பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் 1.39 இன்ச் டிஸ்ப்ளே, IP67 தர சான்று, ப்ளூடூத் காலிங் போன்ற வசதிகள் உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்ட, வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்டிருக்கும் பயர் போல்ட் டெஸ்டினி மெட்டாலிக் ஸ்டிராப் உடன் வருகிறது.

இந்த பிரேம் உறுதியான சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பட்டன் அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இத்துடன் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட மெனு ஸ்டைல்கள் உள்ளன. இவை வாட்ச்-இன் தோற்றத்தை கஸ்டைமஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும் ஏராளமான உடல் நல டிராகிங் வசதிகள் இந்த வாட்ச்-இல் உள்ளது. இதை கொண்டு ஸ்லீப், SpO2 லெவல், ஹார்ட் ரேட் உள்ளிட்டவைகளை டிராக் செய்யலாம். பயர் போல்ட் டெஸ்டினி மாடல் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை டிராக் செய்யும் என்று பயர் போல்ட் தெரிவித்து இருக்கிறது. புதிய வாட்ச் IP67 தர சான்று கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வானிலை விவரங்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய பயர்போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விற்பனை பயர் போல்ட் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெய்க், பிளாக், பின்க் மற்றும் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Comment: