ரூ. 44 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமானது நத்திங் போன்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-13


ரூ. 44 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமானது நத்திங் போன்

நத்திங் போன் 2 மாடலில் க்ரிட் டிசைன், விட்ஜெட் சைஸ் மற்றும் கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஒஎஸ், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது.

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் 2 மாடல் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நத்திங் போன் 1 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.7 இன்ச் FHD+ 1-120 Hz LTPO OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த நத்திங் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கும் நத்திங் போன் 2 மாடலில் க்ரிட் டிசைன், விட்ஜெட் சைஸ் மற்றும் கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்குவதாக நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

நத்திங் போன் 2 அம்சங்கள்: 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன் அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 டூயல் சிம் ஸ்லாட் 50MP பிரைமரி கேமரா, OIS 50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன் 32MP செல்ஃபி கேமரா இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப் சி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி 4700 எம்ஏஹெச் பேட்டரி 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வைட் மற்றும் டார்க் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 512 மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆதும். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள், இயர் ஸ்டிக் மற்றும் அக்சஸரீக்களை வாங்கும் போது தள்ளுபடி பெற முடியும்.

Leave a Comment: