வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியுடன் டொஷிபா 4K மினி எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்

Category : Smart Device | Sub Category : Posted on 2023-07-15


வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியுடன் டொஷிபா 4K மினி எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்

டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. டொஷிபா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M650 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய M650 மாடலில் எலிகன்ட் டிசைன், மெல்லிய பெசல் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட மெட்டல் கட்டமைப்பு உள்ளது. 4K மினி எல்இடி டிஸ்ப்ளே, குவான்டம் டாட் கலர், ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் ப்ரோ கொண்டிருக்கும் M650 மாடல் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகரான, தலைசிறந்த நிறங்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR10+ அடாப்டிவ் HDR தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள REGZA என்ஜின் ZR காட்சிகளின் அடிப்படையில் அவற்றின் தரத்தை ரியல்-டைமில் மேம்படுத்தும்.

கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டயலாக் என்ஹான்சர், 360 சவுன்ட் அப்-ஸ்கேலிங், REGZA பவர் ஆடியோ ப்ரோ வழங்கப்பட்டு இருக்கிறது. இவை சக்திவாய்ந்த பேஸ் மற்றும் அதிக தெளிவான குரல்களை கேட்க வழி செய்கிறது. கனெக்டிவிட்டிக்கு HDMI, ப்ளூடூத் ஆடியோ, டூயல் பேன்ட் வைபை மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த டிவி வாய்ஸ் கன்ட்ரோல் வசதி- அலெக்சா, விடா வாய்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் ஜூலை 15 முதல் ஜூலை 21-ம் தேதி வரை அமேசான் தளத்தில் சிறப்பு சலுகையாக அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி இந்த தேதிகளில் 55 இன்ச் M650 4K டிவி ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் M650 4K மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிவியுடன் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

Leave a Comment: