ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான போக்கோ ஸ்மார்ட்போன்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-17


ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான போக்கோ ஸ்மார்ட்போன்

ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

போக்கோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில், தனது C51 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இதே ஸ்மார்ட்போனின் ஏர்டெல்-எக்ஸ்குளூசிவ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

போக்கோ C51 ஏர்டெல்-லாக்டு வேரியன்ட் விவரங்கள்: புதிய சலுகையின் கீழ் போக்கோ C51 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 5 ஆயிரத்து 999 எனும் விலையில் வாங்கிட முடியும். இதில் ஏர்டெல் பிரத்யேக பலன்களும் அடங்கும். பலன்களை பொருத்தவரை 7.5 சதவீதம் அதிகபட்சம் ரூ. 750 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 50 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

50 ஜிபி இலவச டேட்டா, ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் பயனர்கள் மாதம் ஒரு வவுச்சரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு வவுச்சருக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. புதிய ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், பயனர்கள் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். சாதனத்தை அன்லாக் செய்வதற்கு பயனர்கள் ஸ்மார்ட்போனினை செட்-அப் செய்த 24 மணி நேரத்திற்குள் ஏர்டெல் சிம் ஒன்றை செருகி, குறைந்தபட்சம் ரூ. 199 விலை கொண்ட ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

போக்கோ C51 அம்சங்கள்: 6.52 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் 4 ஜிபி ரேம் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆன்ட்ராய்டு 13 கோ எடிஷன் 8MP பிரைமரி கேமரா டெப்த் சென்சார் 5MP செல்ஃபி கேமரா 5000 எம்ஏஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங் 3.5mm ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ

Leave a Comment: