7700 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப்லெட் அறிமுகம்

Category : Computers | Sub Category : Posted on 2023-07-18


7700 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப்லெட் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் டேப் M10 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது. லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப் M10 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன், டேப் பென் பிளஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 7700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லெனோவோ டேப் M10 5ஜி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கான வீடியோ ஸ்டிரீமிங் வழங்குகிறது.

லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்: 10.61 இன்ச் LCD ஸ்கிரீன், 1200x2000 பிக்சல் ரெசல்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் 4 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் 13MP செல்ஃபி கேமரா 8MP பிரைமரி கேமரா 7700 எம்ஏஹெச் பேட்டரி ப்ளூடூத் 5.1 யுஎஸ்பி டைப் சி 3.5mm ஆடியோ ஜாக் டூயல் ஸ்பீக்கர்கள் டால்பி அட்மோஸ் மைக்ரோபோன் டேப் பென் பிளஸ் சப்போர்ட் இந்திய சந்தையில் லெனோவோ டேப் M10 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Leave a Comment: