ரூ. 32 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய டிவிக்களை அறிமுகம் செய்த எல்ஜி

Category : Smart Device | Sub Category : Posted on 2023-07-19


ரூ. 32 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய டிவிக்களை அறிமுகம் செய்த எல்ஜி

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் நான்கு வித அளவுகளில் கிடைக்கின்றன. புதிய எல்ஜி டிவிக்களில் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. எல்ஜி UR7500 சீரிஸ் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனினும், இவற்றில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி UR7500- 40 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. நான்கு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் HDR10 ப்ரோ மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-க்களில் ஏஐ சூப்பர் ஸ்கேலிங் 4K, 20 வாட் ஸ்பீக்கர்கள், 2.0 சேனல் உள்ளது. எல்ஜி UR7500 சீரிசில் உள்ள ஏஐ பிராசஸர் 4K ஜென் 6 சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த டிவி மாடல்களில் HGiG மோட், ALLM மற்றும் கேம் ஆப்டிமைசர் உள்ளது. இவை கேமிங்கின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மென்பொருளை பொருத்தவரை வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு ஒடிடி ஆப்கள் வழங்கப்படுகின்றன. கனெக்டிவிட்டியை பொருத்தவரை மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட், ப்ளூடூத் மற்றும் வைபை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் 43 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 490 என்றும் 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 47 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: