போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம் - மோதிரம் மாதிரி இருந்துட்டு இவ்வளவு வசதியை வழங்குதா?

Category : Smart Device | Sub Category : Posted on 2023-07-21


போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம் - மோதிரம் மாதிரி இருந்துட்டு இவ்வளவு வசதியை வழங்குதா?

போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் சாதனம் வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் பயனர் உடல்நலன் சார்ந்து பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

போட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹெல்த் மற்றும் பிட்னஸ் டிராக்கர் ஆகும். மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் கொண்டிருக்கிறது. பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்: அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி ஹார்ட் ரேட் மானிட்டரிங் பாடி ரிக்கவரி டிராக்கிங் டெம்பரேச்சர் மானிட்டரிங் SpO2 மானிட்டரிங் ஸ்லீப் மானிட்டரிங் மென்ஸ்டுரல் டிராக்கர் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் போட் ரிங் ஆப் சப்போர்ட் புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. 

Leave a Comment: