ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.. சியோமி

Category : Smart Device | Sub Category : Posted on 2023-07-23


ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.. சியோமி

சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களில் 60Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் டிவி மற்றும் பேட்ச்வால் பிளஸ் வழங்கப்படுகிறது.

சியோமி இந்தியா நிறுவனம் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கூகுள் டிவி சேவை வழங்கப்படுகிறது.

புதிய டிவிக்கள் 32 இன்ச் HD, 40 இன்ச் FHD மற்றும் 43 இன்ச் FHD மாடல்கள் ஆகும். மெல்லிய மெட்டாலிக் டிசைன், பெசல் லெஸ் டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. கூகுள் டிவி மற்றும் கூகுள் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சீரான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகின்றன. இத்துடன் 20 வாட் டால்பி ஆடியோ மற்றும் DTS விர்ச்சுவல் X சரவுன்ட் சவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய பேட்ச்வால் பிளஸ் சேவை பொழுதுபோக்கிற்காக உள்நாடு மட்டுமின்றி சர்வதேச தரவுகளை வழங்குகின்றன. பேட்ச்வால் பிளஸ் சேவையில் மொத்தம் 200-க்கும் அதிக லைவ் சேனல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்துடன் யூடியூப் இன்டகிரேஷன், யூடியூப் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் குவாட் கோர் ஏ35 சிப்செட், 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான மெமரி, டூயல் பேன்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், AV மற்றும் இயர்போன் போர்ட், ரிமோட் கன்ட்ரோல், வழங்கப்படுகிறது. 

சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ்: 32 இன்ச் HD 1366x768 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே 40 இன்ச் FHD 1920x1080 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே 43 இன்ச் FHD 1920x1080 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மெட்டல் மற்றும் பெசல் லெஸ் டிசைன் 178 டிகிரி வியூவிங் ஆங்கில், விவிட் பிக்சர் என்ஜின் 60Hz ரிப்ரெஷ் ரேட் 20 வாட் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ, DTS:HD | DTS விர்ச்சுவல் X ஆட்டோ லோ லேடன்சி மோட் டால்பி அட்மோஸ் பாஸ் த்ரூ கூகுள் டிவி, க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், ஹே கூகுள் மற்றும் பிளே ஸ்டோர் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் பேட்ச்வால் பிளஸ், Mi ஹோம் இன்டகிரேஷன் ப்ளூடூத் 5.0, வைபை 2x HMDI, 2x USB, 1x ஈத்தர்நெட், AV, 3.5mm ஆடியோ ஜாக் 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32 இன்ச் HD ரூ. 14 ஆயிரத்து 999, அறிமுக சலுகையாக ரூ. 13 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40 இன்ச் FHD ரூ. 22 ஆயிரத்து 999 சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 43 இன்ச் FHD ரூ. 24 ஆயிரத்து 999 புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர், ப்ளிப்கார்ட் வலைதளம் மற்றும் ரிடெயில் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. 

Leave a Comment: