ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி.. பிளே ஸ்டேஷன் 5 வாங்க சூப்பர் சான்ஸ்..!

Category : Smart Device | Sub Category : Posted on 2023-07-26


ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி.. பிளே ஸ்டேஷன் 5 வாங்க சூப்பர் சான்ஸ்..!

சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. குறுகிய கால சலுகையாக பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் கேமர்களுக்கு நற்செய்தியை அறிவித்து இருக்கிறது. இன்று (ஜூலை 25) துவங்கி பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 5 விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வுக்கு முன் இந்த கன்சோல்களின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

சோனி பிளே ஸ்டேஷன் 5 சலுகை விவரங்கள்: பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 47 ஆயிரத்து 490 என்று மாறி இருக்கிறது. இந்த விலை குறைப்பு டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வைத்திருப்போருக்கு அசத்தல் கேம்களை இந்த ஆண்டு வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஹாக்வர்ட்ஸ் லெகசி, பைனல் பேன்டசி XVI, மார்வல் ஸ்பைடர் மேன் 2, அசாசின்ஸ் கிரீட் மிரேஜ் மற்றும் ஆலன் வேக் 2 உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

Leave a Comment: