இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ புதிய அப்டேட்.. ஆர்டர் போட ரெடியாகிடுங்க..!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-27


இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ புதிய அப்டேட்.. ஆர்டர் போட ரெடியாகிடுங்க..!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி, இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா டிசைன் வழங்கப்படும் என்றும் இது எதிர்கால தோற்றம், வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரன்ட் போட்டோ க்ரோமேடிக் ரியர் பேனல் டிசைன் வழங்கப்படுகிறது. இதுவரை உருவாக்கியதிலேயே சக்திவாய்ந்த மெஷின்களில் ஒன்றாக GT சீரிஸ் இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்து உள்ளது. இத்துடன் விளம்பரம் இல்லாத ஒஎஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும்.

முன்பதிவு சலுகைகள்: 

- முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ், கார்பன் பாக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது.

 - ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி அல்லது எக்சேன்ஜ் முறையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி 

- ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை

Leave a Comment: