Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-29
இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஒப்போ நிறுவனம் தனது புதிய போல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இது ஒப்போ பைன்ட் N3 பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஒப்போ பைன்ட் N3 மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் முந்தைய பைன்ட் N மற்றும் பைன்ட் N2 போன்று சீன சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. புதிய பைன்ட் N3 விவரங்கள் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.
ஒப்போ பைன்ட் N3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன், 8 இன்ச் AMOLED 2K 120Hz டிஸ்ப்ளே, 4805 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5x ரேம், 1 டிபி UFS 4.0 மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 48MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 32MP அல்லது 20MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்படலாம்.