பட்ஜெட் விலையில் போக்கோ பாட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-07-30


பட்ஜெட் விலையில் போக்கோ பாட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட் உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. புதிய போக்கோ பாட்ஸ் அம்சங்கள், ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3, IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, டச் கன்ட்ரோல்கள், லோ-லேடன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

போக்கோ பாட்ஸ் அம்சங்கள்: ப்ளூடூத் 5.3, எஸ்.பி.சி. கோடெக், கூகுள் பாஸ்ட் பேர் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் 60ms லோ-லேடன்சி கேமிங் மோட் டச் கன்ட்ரோல்கள் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் இயர்பட்-இல் 34 எம்ஏஹெச் பேட்டரி சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி 10 நிமிட சார்ஜில் 90 நிமிடங்களுக்கு பேக்கப் 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மிட்நைட் குரூவ் நிறத்தில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Comment: