டைட்டானியம் ஃபிரேம், மெல்லிய பெசல்களுடன் உருவாகும் ஐபோன் 15 ப்ரோ

Category : Mobiles | Sub Category : Posted on 2023-07-31


டைட்டானியம் ஃபிரேம், மெல்லிய பெசல்களுடன் உருவாகும் ஐபோன் 15 ப்ரோ

ஐபோன் 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 1.5mm ஆக குறைக்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஐபோன் 15 சீரிஸ் பற்றிய ஏராளமான விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஐபோன் 15 சீரிஸ் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இது பற்றி ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லோ-இன்ஜெக்ஷன் பிரெஷர் ஓவர் மால்டிங் எனும் புதிய உற்பத்தி தொழில்நுட்பம் (LIPO) காரணமாக இது சாத்தியமாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 2.2mm-இல் இருந்து 1.5mm ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களில் LIPO தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதே தொழில்நுட்பம் எதிர்கால ஐபேட் மாடல்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. மெல்லிய பெசல்கள் மட்டுமின்றி ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை தற்போதைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம்களை விட குறைந்த எடை, அதிக விலை கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நான்கு மாடல்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படும் பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தற்போதைய ஏ16 சிப்செட்-ஐ விட அதிவேகமாக இருக்கும். இந்த சிப்செட் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment: