Category : Computers | Sub Category : Posted on 2023-08-03
லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப் மாடல்கள் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கிறது. லெனோவோ LOQ சீரிஸ் கேமிங் லேப்டாப்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய LOQ கேமிங் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13th Gen இன்டெல் கோர் அல்லது ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர், NVIDIA ஜிஃபோர்ஸ் RTX4060 லேப்டாப் GPU வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் லெனோவோ நிறுவனம் யோகாபுக் 9i மாடலை அறிமுகம் செய்து, லீஜியன் ப்ரோ சீரிஸ் மாடல்களை 13th Gen மற்றும் ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர்களுடன் அப்டேட் செய்தது.
லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் அம்சங்கள்: 15.6 இன்ச் WQHD 2560x1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட் 13th Gen இன்டெல் கோர் i7 பிராசஸர் Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050 அல்லது Nvidia ஜிஃபோர்ஸ் RTX4060 GPU 12th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர் Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050, RTX4060 அல்லது RTX3050 GPU ஏஎம்டி ரைசன் 7 ஆக்டா கோர் பிராசஸர் Nvidia ஜிஃபோர்ஸ் RTX3050 அல்லது RTX4050 GPU 8 ஜிபி DDR5 ரேம், 512 ஜிபி PCIe NVMe SSD Nvidia G-Sync 60 வாட் ஹவர் பேட்டரி சூப்பர் ரேபிட் சார்ஜ் சப்போர்ட் 4-ஜோன் RGB பேக்லிட் கீபோர்டு வின்டோஸ் 11 ஹோம் 2x2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் FHD 1080 பிக்சல் வெப்கேமரா லெனோவோ கேமிங் கீபோர்டு ப்ளூடூத் 5.1
விலை மற்றும் விற்பனை விவரம்: லெனோவோ LOQ சீரிஸ் லேப்டாப்களின் விலை ரூ. 78 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.