ரூ. 799 மட்டும் தான்.. 50 மணி நேர பிளேபேக் வழங்கும் இயர்பட்ஸ் அறிமுகம்..!

Category : HeadPhones | Sub Category : Posted on 2023-08-04


ரூ. 799 மட்டும் தான்.. 50 மணி நேர பிளேபேக் வழங்கும் இயர்பட்ஸ் அறிமுகம்..!

மிவி நிறுவனம் கடந்த மாதம் டுயோபாட்ஸ் K6 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. புதிய டுயோபாட்ஸ் D3 மாடலில் 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள் உள்ளன.

மிவி நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் டுயோபாட்ஸ் D3 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் டுயோபாட்ஸ் k6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய டுயோபாட்ஸ் D3 மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய மிவி டுயோபாட்ஸ் D3 மாடலில் "ஸ்டேரி நைட் எபெக்ட்" வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் தோற்றத்தை அழகாக காட்சியளிக்க செய்கிறது. இதில் உள்ள 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள், தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ்-இல் டூயல் மைக் ஏ.ஐ., என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

மிவி டுயோபாட்ஸ் D3 அம்சங்கள்: 13mm டிரைவர்கள் டூயல் மைக் AI-ENC சிப் AI என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் 50ms அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட் ப்ளூடூத் 5.3 AAC, SBC கோடெக் சப்போர்ட் 380 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்), 40 எம்ஏஹெச் x2 பேட்டரி (இயர்பட்ஸ்) 50 மணி நேரத்திற்கு பிளேபேக் ஸ்விப்ட் சார்ஜ் தொழில்நுட்பம் 10 நிமிட சார்ஜில் 500 நிமிடங்கள் பயன்படுத்தலாம் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: மிவி டுயோபாட்ஸ் D3 மாடல் ஆர்க்டிக் புளூ, கோபால்ட் பிளாக், ஹசெல் கிரீன் மற்றும் லைம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Comment: