இந்தியா முழுக்க இந்த போன் தான் இருக்கும் போலயே.. 8GB ரேம் உடன் இன்னொரு Realme போன்..

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-08


இந்தியா முழுக்க இந்த போன் தான் இருக்கும் போலயே.. 8GB ரேம் உடன் இன்னொரு Realme போன்..

போற போக்கை பார்த்தா இந்தியா முழுக்க இந்த சீரீஸின் கீழ் வந்த ஸ்மார்ட்போன்கள் தான் இருக்கும் போலயே?" என்று கூறவைக்கும்படியாக ரியல்மி நிறுவனமானது அதன் ரியல்மி 11 சீரீஸின் (Realme 11 Series) இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சீரீஸின் கீழ் வெளியான ப்ரோ பிளஸ் மாடல் ஆனது விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இது முதல் நால் விற்பனையிலேயே 60,000 யூனிட்கள் விற்று தீர்ந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இதே ரியல்மி 11 சீரீஸின் கீழ் மேலுமொரு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ரியல்மி 11 சீரீஸின் கீழ் ஏற்கனவே என்னென்ன மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்: ரியல்மி நிறுவனமானது சமீபத்தில் தான், அதன் புதிய ரியல்மி 11 சீரீஸின் கீழ் பல மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த சீரீஸின் கீழ் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G), ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+ 5G) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ரியல்மி 11 5ஜி வேரியண்ட் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகவில்லை. இதற்கிடையில் ரியல்மி 11 சீரீஸின் கீழ் ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G) என்கிற மாடல் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது என்னென்ன கலர் ஆப்ஷன்களில் (Color Options) மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) வெளியாகும் என்கிற தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

ஆப்யுல்ஸ் (Appuals) வழியாக வெளியான அறிக்கையின்படி, ரியல்மி நிறுவனமானது கூடிய விரைவில் ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வகைகளில் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வெளியாகும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பர்பில் டான் (Purple Dawn) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். இது தவிர்த்து வரவிருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது ஆக்டாகோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Octa-core 6nm MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 67W வயர்டு சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மற்றும் 6.72-இன்ச் 120ஹெர்ட்ஸ் ஃபுல்-எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ மாடல்கள் ஆனது மாலி-ஜி68 ஜிபியு உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த 2 ப்ரோ மாடல்களுமே 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1080 x 2412 பிக்சல்ஸ்) கர்வ்டு டிஸ்பிளேக்களை பேக் செய்கின்றன. வேறுபாடுகளை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோ மாடலானது 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது உள்ளது; ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது 100W வயர்டு சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்கள் ஆனது முறையே ரூ. 24,999 மற்றும் ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.27,999 என்றும் மற்றும் ரூ. முறையே 29,999. இரண்டு ப்ரோ மாடல்களுமே ஆஸ்ட்ரல் பிளாக் (Astral Black), ஒயாசிஸ் கிரீன் (Oasis Green) மற்றும் சன்ரைஸ் பீஜ் (Sunrise Beige) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கின்ற்ன.

Leave a Comment: