2K ரெசல்யூஷன் கொண்ட புது மானிட்டர்கள்.. வேற லெவல் சம்பவம் செய்த சாம்சங்..!

Category : Smart Device | Sub Category : Posted on 2023-08-09


2K ரெசல்யூஷன் கொண்ட புது மானிட்டர்கள்.. வேற லெவல் சம்பவம் செய்த சாம்சங்..!

சாம்சங் நிறுவனத்தின் புதிய மானிட்டர் கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை குறைக்கும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இரண்டு புதிய மானிட்டர்களிலும் அதிகபட்சம் 100Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய மானிட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. வியூபினிட்டி S8 மற்றும் S9 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் தற்போது, வியூபினிட்டி S65UC மற்றும் வியூபினிட்டி S65VC மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு மானிட்டர்களும் கிரியேடிவ் துறையில் பணியாற்றுவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு மானிட்டர்களிலும் 34 இன்ச் VC வளைந்த பேனல் மற்றும் 1000r ரேடியஸ் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் 3440x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் அதிகபட்சம் 100Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 வாட் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் டிஸ்ப்ளேக்களில் 1.07 பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக AMD FreeSync சப்போர்ட் வழங்கப்படுகிறது. இது கேம்பிளேவின் போது ஸ்கிரீன் ஸ்டட்டர் ஆவதை குறைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐ சேவர் மோட், ஃப்ளிக்கர் - ஃபிரீ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் கண்களில் சோர்வு ஏற்படுவது குறைக்கப்படுகிறது. இத்துடன் பிக்சர்-இன்-பிக்சர் மற்றும் பிக்சர்-பை-பிக்சர் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இமேஜ்சைஸ், ஆஃப் டைமர் பிளஸ், HDR10 பிளஸ், ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ், அடாப்டிவ் பிக்சர் மற்றும் KYM ஸ்விட்ச் வசதிகள் வழங்கப்படுகின்றன. கனெக்டிவிட்டிக்கு 1x 1.2EA டிஸ்ப்ளே போர்ட், 1x HMDI மற்றும் ஹெட்போன் போர்ட்கள் உள்ளன. இத்துடன் யுஎஸ்பி போர்ட்கள், யுஎஸ்பி சி போர்ட், மற்றும் LAN நெட்வொர்க் கனெக்ஷன் வசதியும் வழங்கப்படுகிறது. இரண்டு புதிய மானிட்டர்களும் இம்மாத இறுதியில் ஜெர்மனியில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Leave a Comment: