வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஐகூ Z7 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-10


வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஐகூ Z7 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை பலமுறை வெளியிடப்பட்டு இருந்தது. ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்று காட்சியளிக்கிறது.

ஐகூ நிறுவனம் தனது Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக ஐகூ நிறுவனம் ஐகூ Z7 மற்றும் Z7S 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும், புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர்களை மட்டும் வெளியிட்டு வந்தது. எனினும், இதன் அறிமுக தேதி மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தது.

தற்போது ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் அதன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார். புகைப்படத்தின் படி ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சற்றே வளைந்த ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விவோ V29 லைட் 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave a Comment: