22 இன்ச் தான்.. கியூட் லுக்கில் புது மானிட்டர் அறிமுகம்.. விலையும் குறைவு தான்..!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-12


22 இன்ச் தான்.. கியூட் லுக்கில் புது மானிட்டர் அறிமுகம்.. விலையும் குறைவு தான்..!

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மானிட்டர் டூயல் இன்புட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. புதிய மானிட்டர் அறிமுக சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ZEB EA122 22 இன்ச் அளவு கொண்ட HD+ எல்.இ.டி. மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பியூர் பிக்சல் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ராக்சர் 100 வாட் டி.ஜெ. ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மானிட்டர் அறிமுகமாகி இருக்கிறது.

புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 எல்.இ.டி. மானிட்டரில் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் (1680x1050), அதிகபட்சம் 250 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட், 5ms ரெஸ்பான்ஸ் டைம், டிஸ்ப்ளேவில் VA பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ காரணமாக இந்த மானிட்டரை அலுவல் மற்றும் கேமிங் என இருவித பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் இன்புட் ஆப்ஷன்கள்: HDMI மற்றும் VGA வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு சாதனங்களை கனெக்ட் செய்ய முடியும்.

ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் அம்சங்கள்: பியூர் பிக்சல், எல்.இ.டி. பேக்லிட் VA பேனல் வால் மவுன்ட் டிசைன் 22 இன்ச் HD+ 1680x1050 பிக்சல் ரெசல்யூஷன் 5ms ரெஸ்பான்ஸ் டைம், 60Hz ரிப்ரெஷ் ரேட் HDMI மற்றும் VGA கனெக்டிவிட்டி புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் ஆகஸ்ட் 14-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த மானிட்டர் ரூ. 4 ஆயிரத்து 699 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மை விலையான ரூ. 12 ஆயிரத்து 799-ஐ விட குறைவு ஆகும்.

Leave a Comment: