இது தொடக்கம் தான்.. போகப் போக பாத்துக்கலாம்.. 24 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி போன் அறிமுகம்!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-17


இது தொடக்கம் தான்.. போகப் போக பாத்துக்கலாம்.. 24 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி போன் அறிமுகம்!

புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல். இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய GT 5 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், வரும் நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரியல்மி சீனா தலைவர் சு கி சேஸ், ரியல்மி GT 5 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவரது வெய்போ பதிவில் இது குறித்த பதிவில், "30-க்கும் அதிக இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 பிளாக்ஷிப் மாடல்களை வெவ்வேறு பிரான்டுகள் பயன்படுத்தி விட்டன. ஆனால் இவை எதுவும் உச்சக்கட்ட செயல்திறனை வழங்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்த பதிவின் மூலம் புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதே பிராசஸர் தற்போது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது LPDDR5x ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரியல்மி GT 5 மாடல் நுபியா ரெட்மேஜிக் 8S ப்ரோ பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடல்கள் வரிசையில், 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இணையும்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி GT 5 மாடலில் 6.74 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP மூன்றாவது சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 240 வாட் சார்ஜிங், 5200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Leave a Comment: