ரூ. 1499-க்கு புது சவுன்ட்பார்.. இவ்வளவு அம்சங்களா

Category : Smart Device | Sub Category : Posted on 2023-08-20


ரூ. 1499-க்கு புது சவுன்ட்பார்.. இவ்வளவு அம்சங்களா

அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது. புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும். புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: