பட்ஜெட் விலையில் பக்கா அம்சங்கள்.. ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்..!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-24


பட்ஜெட் விலையில் பக்கா அம்சங்கள்.. ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்..!

ரியல்மி 11 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 வழங்கப்படுகிறது. ரியல்மி 11 5ஜி மாடலில் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11x 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.72 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. வரையிலான ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 11 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா, 11x 5ஜி மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் 2MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி 11 5ஜி மாடலில் குளோரி ஹாலோ டிசைன், கேமரா மாட்யுலை சுற்றி கோல்டன் ரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 11 5ஜி மாடலில் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. ரியல்மி 11x 5ஜி மாடலில் 33 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ரியல்மி 11x 5ஜி மற்றும் ரியல்மி 11 5ஜி அம்சங்கள்: 6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz டைனமிக் ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர் Arm மாலி-G57 MC2 GPU ரியல்மி 11x 5ஜி- 6 ஜிபி/ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ரியல்மி 11 5ஜி - 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி டூயல் சிம் ஸ்லாட் ஆண்டாராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 ரியல்மி 11 5ஜி - 108MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் 2MP போர்டிரெயிட் கேமரா ரியல்மி 11x 5ஜி - 64MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் 2MP போர்டிரெயிட் கேமரா ரியல்மி 11 5ஜி - 16MP செல்ஃபி கேமரா ரியல்மி 11x 5ஜி - 8MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 யு.எஸ்.பி. டைப் சி 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ரியல்மி 11 5ஜி - 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ரியல்மி 11x 5ஜி - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் விலை மற்றும் விற்பனை விவரம்: ரியல்மி 11 5ஜி மாடல் குளோரி பிளாக் மற்றும் குளோரி கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 11x 5ஜி மாடல் பர்பில் டான் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: