ஸ்மார்ட் ரிங் விலையை அறிவித்த போட்..

Category : Smart Device | Sub Category : Posted on 2023-08-26


ஸ்மார்ட் ரிங் விலையை அறிவித்த போட்..

போட் நிறுவனத்தின் புதிய ஆக்டிவிட்டி டிராக்கர் ஸ்மார்ட் ரிங் பெயரில் அறிமுகம். போட் ஸ்மார்ட் ரிங் மாடலில் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. போட் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த தனது, போட் ஸ்மார்ட் ரிங் மாடலின் விலையை தற்போது அறிவித்து இருக்கிறது. மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் மற்றும் எளிதில் அணியக்கூடிய வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது.

பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற வகையில் ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்: அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி ஹார்ட் ரேட் மானிட்டரிங் பாடி ரிக்கவரி டிராக்கிங் டெம்பரேச்சர் மானிட்டரிங் SpO2 மானிட்டரிங் ஸ்லீப் மானிட்டரிங் மென்ஸ்டுரல் டிராக்கர் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் போட் ரிங் ஆப் சப்போர்ட்

Leave a Comment: