டிமென்சிட்டி 9200 பிராசஸருடன் புதிய ஃபைண்ட் N3 ஃப்ளிப் அறிமுகம் - ஒப்போ அசத்தல்!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-08-30


டிமென்சிட்டி 9200 பிராசஸருடன் புதிய ஃபைண்ட் N3 ஃப்ளிப் அறிமுகம் - ஒப்போ அசத்தல்!

ஒப்போ ஃபைண்ட் N3 ஃப்ளிப் போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர் கொண்டுள்ளது. இந்த ஃப்ளிப் போன் ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபைண்ட் N3 ஃப்ளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃப்ளிப் போன் ஆகும். இதில் 6.8 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.26 இன்ச் 60Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஃப்ளிப் போனில் மிகக் குறைந்த மற்றும் உறுதியான செங்குத்தான ஹின்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏரோஸ்பேஸ் தரம் கொண்ட MIM அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளிப் போன் ரெயின்லாந்து சான்று பெற்று இருப்பதாக ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மாடலிலும் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 4செ.மீ. வரையிலான மேக்ரோ ஆப்ஷன், 32MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஃப்ளிப் போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரை LPDDR5x ரேம், 512 ஜி.பி. வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் N3 ஃப்ளிப் அம்சங்கள்: 6.8 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ E6 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 3.26 இன்ச் 720x382 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர் இமார்டலிஸ் G715 11-கோர் GPU 12 ஜி.பி. LPDDR5x மெமரி 256 / 512 UFS 3.1 ஜி.பி. மெமரி ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர்ஒ.எஸ். 13.2 50MP பிரைமரி கேமரா 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் 32MP டெலிபோட்டோ கேமரா 32MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.3 யு.எஸ்.பி. டைப் சி யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி 44 வாட் சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் 

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஒப்போ ஃபைண்ட் N3 ஃப்ளிப் மாடல் மூன்லைட், ரோஸ் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 6 ஆயிரத்து 799 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 77 ஆயிரத்து 120 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: