சந்திரயான் 3 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிட்ட டெக்னோ

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-09


சந்திரயான் 3 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிட்ட டெக்னோ

ஒட்டுமொத்த தோற்றம், சந்திரயான் 3 நிலவு திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடல் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் "மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்" (Moon Explorer Edition) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று இருப்பதை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடலின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்: 6.78 இன்ச் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் மாலி G52 GPU 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 12.6 50MP டூயல் கேமரா செட்டப் 32MP செல்ஃபி கேமரா டூயல் சிம் ஸ்லாட் 4ஜி, வைபை, ப்ளூடூத் 3.5mm ஆடியோ ஜாக் கைரேகை சென்சார் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடல் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள லெதர் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், சந்திரயான் 3 நிலவு திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Comment: