பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா G சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-12


பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா G சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது. ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.56 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 5 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, மேக்ரோ சென்சார்கள் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். இரண்டு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. நோக்கியா G42 மாலின் பேக் கவர் 65 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

நோக்கியா G42 5ஜி அம்சங்கள்: 6.56 இன்ச் HD+ 720x1612 பிக்சல் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் அட்ரினோ 619 GPU 6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. மெமரி ஆண்ட்ராய்டு 13 ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 50MP பிரைமரி கேமரா 2MP டெப்த் கேமரா 2MP மேக்ரோ கேமரா 8MP செல்ஃபி கேமரா 3.5mm ஆடியோ ஜாக் பக்கவாட்டில் கைரேகை சென்சார் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யு.எஸ்.பி. டைப் சி 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போன் சோ கிரே மற்றும் சோ பரப்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: