ஐபோன் 15 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-13


ஐபோன் 15 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம். புதிய ஆப்பிள் சாதனங்கள் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிப்பு. ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் சாதனங்களில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும். புதிய சீரிஸ் 9 மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய விலை: புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அலுமினியம் மாடலின் இந்திய விலை ரூ. 41 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷனின் இந்திய விலை ரூ. 70 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விற்பனையும் செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

Leave a Comment: